'தலப்பொங்கல்' கொண்டாடிய ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடி.. வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,January 16 2023]

இந்த ஆண்டு நயன்தாரா, ஹன்சிகா உள்பட பல திரையுலக பிரபலங்கள் தலப்பொங்கல் கொண்டாடி வரும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி ஜோடியும் தல பொங்கல் கொண்டாடும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர், விஜே மகாலட்சுமியை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் குறித்த புகைப்படம் வெளியாகிய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் இந்த ஜோடி சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடிக்கு இது தல பொங்கல் என்பதால் பொங்கல் கொண்டாட்டத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். செங்கலால் உண்டாக்கப்பட்ட அடுப்பில் மண்பானையில் பொங்கல் வைத்த புகைப்படங்களை மகாலட்சுமி பதிவு செய்து அனைவருக்கும் தங்களது பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தயாரிப்பாளர் ரவீந்தர் தனது பொங்கல் செய்தியாக ’நிரம்பி வழியும் பால் மற்றும் கரும்புகளின் இனிமை உங்கள் வீட்டை நல்லிணக்கத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிரப்பட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.