'தல' படத்துடன் இணையும் கலைப்புலி எஸ்.தாணு

  • IndiaGlitz, [Sunday,April 10 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தை பிரமாண்டமாக தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு தற்போது 'தல' படத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

\

தல அஜித் பெருமைகளை சொல்லும் வகையில் தல ரசிகர்கள் நடித்து வரும் திரைப்படம் 'தல போல வருமா'. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. பழம்பெரும் நடிகர், தயாரிப்பாளர் சங்கிலி முருகன் வெளியிட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர், கலைப்புலி எஸ்.தாணுவின் ஆசியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் பிறந்த நாளான வரும் மே மாதம் 1ஆம் தேதி இந்த படம் வெலிவரவுள்ளது. இந்த படத்தை பிக்சர் ஃபெர்பெக்ட் புரடொக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் ரசிகர்கள் நடித்த 'மூன்று ரசிகர்கள்' படத்தை போலவே தல ரசிகர்கள் உருவாக்கியுள்ள படம்தான் 'தல போல வருமா' படம் என்பது குறிப்பிடத்தக்கது.