'தல' பிறந்த நாளில் ஆட்டநாயகன் விருது பெற்ற 'தல'

  • IndiaGlitz, [Thursday,May 02 2019]

நேற்று ஒருபுறம் தல அஜித்தின் ரசிகர்கள் அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வந்த நிலையில் நேற்று தல தோனியின் அபார பேட்டிங் மற்றும் ஸ்டெம்பிங் காரணமாக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிரான விளையாடிய சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 14 ஓவர்கள் முடிவில் வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 14வது ஓவரில் தல தோனி களமிறங்கினார். அதன்பின் தல தோனி பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசியதால் அடுத்த ஆறு ஓவர்களில் சிஎஸ்கே அணி 98 ரன்கள் அடித்து மொத்த ஸ்கோர் 179 என்ற நிலைக்கு கொண்டு வந்தது. தோனி 22 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.

அதுமட்டுமின்றி தல தோனி நேற்று செய்த இரண்டு அபாரமான ஸ்டெம்பிங், சிஎஸ்கே அணி வெற்றி பெற இன்னொரு காரணமாக அமைந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைவான நேரத்தில் அவர் செய்த ஸ்டெம்பிங்கால் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மோரீஸ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். தோனியின் அபார பேட்டிங் மற்றும் ஸ்டெம்பிங் காரணமாக அவருக்கு நேற்று ஆட்டநாயகன் விருது கிடைத்தது. 'தல' அஜித் பிறந்த நாளில் தல தோனிக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது அபூர்வமான ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது. நேற்று இரண்டு 'தல' ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாடமான நாளாக அமைந்துள்ளது.