போஸ்டர் வச்சதுக்கே பட்டாசு வெடித்து கொண்டாடிய 'தல' ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. விஸ்வாசம்' என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தை அடுத்து தல அஜித் நடிக்கும் நடித்துள்ள அடுத்த படம் என்பதால் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே அமிதாப் நடித்த 'பிங்க்' திரைப்படம் இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அதன் தமிழ் ரீமேக் படமான இந்த படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த படத்தின் ட்ரெய்லரின் ரிலீசுக்கு பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்துக்கே சென்று உள்ளது என்று கூறலாம்.
இந்த நிலையில் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் வெளியாக இன்னும் ஒருசில தினங்களே உள்ள நிலையில் இப்போதே திரையரங்குகளில் போஸ்டர்கள், பேனர்கள், கட்-அவுட்டுக்கள் வைக்க தல ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில் இன்று காலை சென்னையில் உள்ள காசி தியேட்டரில் தல ரசிகர்கள் பிளக்ஸ் கட்-அவுட் ஒன்றை வைத்து, பட்டாசு வெடித்து கொண்டாடினர். பிளக்ஸ் கட்-அவுட் வைத்ததற்கே தல ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது அந்த வழியே சென்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கே பட்டாசு கொண்டாட்டம் என்றால், படம் ரிலீஸ் ஆகும் நாளில் அந்த தியேட்டரில் இன்னும் என்னென்ன நடக்குமோ என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தியேட்டர்ல ப்ளக்ஸ் வச்சதுக்கே ஆகஸ்ட் 8 ரிலீஸ் ஆக போற படத்துக்கு இப்பவே பட்டாசு வச்சு கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. @kasi_theatre எப்பவுமே தலக்கு மட்டும் தான் கோட்ட னு தல படம் பண்ண ரிலீஸ் ஆகுற ஒவ்வொரு டைமும் நிரூபிச்சிறுறாங்க ?? pic.twitter.com/4Ay7aOmiFI
— தல அரவிந்த்™3.0 (@aravindhakon3) July 27, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments