டாஸ் வென்று வித்தியாசமான முடிவெடுத்த தல தோனி!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே முக்கிய போட்டியான பிளே ஆஃப் போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபடுவார்கள்
இந்த தொடரில் சென்னை அணியை இருமுறை மும்பை வீழ்த்தியுள்ள்தால் கூடுதல் நம்பிக்கையுடன் இன்று களமிறங்கும். அதேபோல் அடிபட்ட சிங்கம் போன்று மும்பையை பழிவாங்க தோனியின் படை காத்திருக்கின்றது
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் சென்னை அணியின் கேப்டன் தல தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த தொடரில் தோனி உள்பட பெரும்பாலான கேப்டன்கள் டாஸ் வென்றால் பந்துவீச்சை தேர்வு செய்து சேசிங் செய்து வரும் நிலையில், தல இன்று வித்தியாசமான முடிவை எடுத்துள்ளார். தல தோனியின் இந்த முடிவு அணிக்கு வெற்றியை பெற்றுத்தருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
The @ChennaiIPL win the toss and elect to bat first against the @mipaltan in #Qualifier1 of #VIVOIPL#MIvCSK pic.twitter.com/8bAeWDTCoa
— IndianPremierLeague (@IPL) May 7, 2019
Toss time at 7 with the No. 7! #Thala calls #Thala and wins it! Singa Padhai today! We will be batting first! #WhistlePodu #Yellove #MIvCSK ???? pic.twitter.com/2uum2mVi92
— Chennai Super Kings (@ChennaiIPL) May 7, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments