சூப்பர் ஸ்டார் ரஜினியை இன்றிரவு சந்திக்கிறார் தல!

  • IndiaGlitz, [Friday,January 19 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு அதிகாரபூர்வமாக அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் அரசியல் கட்சிக்கான ஆரம்பகட்ட பணியில் விறுவிறுப்பாக உள்ளனர்.

இந்த நிலையில் ரஜினியை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், தேசிய தலைவர்களும் சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அவர் அறிவித்த ஆன்மீக அரசியலுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பும் ஆதரவும் பெருகி வருகிறது.

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை இன்றிரவு தல தோனி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் ஐபிஎல் களத்தில் இறங்கவுள்ளது குறித்து சென்னையில் பேட்டியளித்த தல தோனி, 'சென்னை அணி விளையாடாத இரண்டு ஆண்டுகள் என்னை மேலும் வலுவாக்கி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல அணிகள் என்னை அணுகின, ஆனால் சென்னை எனது மனதுக்கு நெருக்கமானது./ இரண்டு வருடங்கள் விளையாடாவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவு அப்படியே உள்ளது. சிஎஸ்கே அணியில் 18 முதல் 20 வீரர்கள் இடம்பெறுவார்கள் என்றும், அஸ்வினை அணியில் சேர்க்க முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் தல தோனி தெரிவித்தார்

More News

தண்ணீர் பிரச்சனையை அலசும் இன்னொரு படம் 'கேணி: இயக்குநர் எம்.ஏ. நிஷாத்

கே.பாலசந்தர் இயக்கிய 'தண்ணீர் தண்ணீர்' முதல் கோபி நயினார் இயக்கிய 'அறம்' வரை தண்ணீர் பிரச்சனையை அலசும் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள நிலையில் இதே பிரச்சனையை அலசும் படம் 'கேணி'

வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சிப்பது அநாகரீகத்தின் உச்சம்: சரத்குமார்

கவிஞர் வைரமுத்து சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். அந்த கருத்தும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதை மேற்கோள் காட்டியே தெரிவித்தார்.

ரஜினி, விஜய் படங்களுக்கு பின்னர் 'பத்மாவத்' படத்திற்கு கிடைத்த பெருமை.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் என்ற திரையரங்கம் உலகிலேயே அதிக இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய, மிக பிரமாண்டமான தியேட்டர் என்பது அனைவரும் அறிந்ததே

இன்று விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளி

இன்று விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 62' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் அவரது ரசிகர்களுக்கு நாளை இன்னுமொரு தீபாவளியாகவே கருதப்படுகிறது

என்கிருந்து குரல் வரவேண்டுமோ அங்கிருந்து வரவில்லை: ரஜினியை தாக்கிய பாரதிராஜா

வேலுபிரபாகரன் இயக்கவுள்ள 'கடவுள் 2' படத்தின் தொடக்கவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பாரதிராஜா,சீமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.