புதிய கட்டுப்பாடு எதிரொலி: சென்னை அணியில் மீண்டும் தல தோனி?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் கடந்த பத்து ஆண்டுகளாக பெரும் வரவேற்புடன் நடந்து வரும் நிலையில் அடுத்த ஐபிஎல் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
2018ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் முடிவடைந்துவிட்டதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்கவுள்ளன.
இந்த நிலையில் மீண்டும் இணையவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் ஆகிய இரு அணிகளில் ஏற்கனவே விளையாடிய 5 வீரர்களை தக்க வைத்து கொள்ள அந்தந்த அணி உரிமையாளர்களுக்கு உரிமை உண்டு என்று ஐபிஎல் நிர்வாக குழு சற்றுமுன் விதித்துள்ளது.
எனவே தல தோனி உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐந்து வீரர்கள் மீண்டும் இடம்பெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படாது என்று கூறப்படுகிறது. மீண்டும் தல தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உருவாகும் என்ற நம்பிக்கை கிரிக்கெட் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com