தல தோனிக்கு உற்சாகத்தை கொடுத்த சென்னை ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தல தோனி விலகியிருந்தாலும் சென்னை ரசிகரகளை பொருத்தவரையில் தோனி தான் கேப்டனாக இருக்கின்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் கிடைத்த பாசப்பிணைப்பு இது. நேற்று சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின்போது தல தோனி தல தோனி என ரசிகர்கள் கரகோஷம் போட்டதே இதற்கு சான்று
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா அவுட் ஆனவுடன், அவரது விக்கெட் குறித்து கூட கவலைப்படாத ரசிகர்கள் தல தோனியை வரவேற்கும் வகையில் போட்ட கரகோஷம் விண்ணை பிளந்தது.
தோனி ஒவ்வொரு முறையும் பவுண்டரியும் சிக்சரும் அடித்தபோது ரசிகர்களின் கரவொலியும் ஆர்ப்பரிப்பும் அடங்க சில நிமிடங்கள் ஆனது. மேலும் தோனி அடித்த ஒரு பந்தை பீல்டிங் செய்த ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா, தோனியை நோக்கி பந்தை எரிவதை போல மிரட்டினார். அப்போது ரசிகர்கள் அவருக்கு எதிராக போட்ட சத்தத்தால் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஒருகணம் அச்சத்தை கொடுத்தது. சென்னை மக்களின் மனதில் தல தோனி என்றுமே ஹீரோதான் என்பது நேற்றைய போட்டி மீண்டும் நிரூபித்தது
இந்த நிலையில் தல தோனி நேற்று அரைசதம் அடித்த போது ஒரு சாதனையை ஏற்படுத்தினார். இந்த அரைசதம் அவரது 100வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் மட்டுமே இதுவரை 100 அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com