தோனியின் 'எல்ஜிஎம்' அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்கும் ‘எல்ஜிஎம்’ என்ற தமிழ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இருவரும் இணைந்து தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினர். இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘எல்ஜிஎம்’ என்ற தமிழ் திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா உள்பட டாலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘எல்ஜிஎம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா ஆகிய மூவரும் உள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் யோகி பாபு உட்பட பலர் இந்த படத்தில் நடித்து வரும் இந்த படத்திற்கு விஸ்வஜித் ஒளிப்பதிவும், இந்த படத்திற்கு இயக்குனர் தமிழ்மணியே இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
First look of #LGM is here!
— DEC (@decoffl) April 10, 2023
Get ready to be bowled over by this fun filled family entertainer!@DhoniLtd @msdhoni @SaakshiSRawat @iamharishkalyan @i__ivana_ @ActressNadiya @iyogibabu @rjvijayofficial @o_viswajith @madhankarky @PradeepERagav #VikasHasija @PriyanshuChopra pic.twitter.com/zFKyT1kxXh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments