தமிழ் நடிகருக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த தோனி.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் பிரபல நடிகருக்கு டோனி தனது கையொப்பமிட்ட பேட்டை பரிசாக வழங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக மட்டுமின்றி ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருபவர் யோகி பாபு. இவர் நடிகர் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் என்பதும் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் இவர் படக்குழுவினர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் யோகி பாபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தோனி கையொப்பமிட்டு பரிசாக கொடுத்த கிரிக்கெட் பேட்டை கையில் வைத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் யோகி பாபு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவரும் ’ஜெயிலர்’ திரைப்படம் உள்பட சுமார் 20 படங்களில் நடித்து பிஸியான நடிகராக திரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Direct from #MSDhoni hands which he played in nets . Thankyou @msdhoni sir for the bat .... Always cherished with the - your cricket memory as well as cinematic memory #dhonientertainmentprod1 #sakshidhoni . pic.twitter.com/2iDv2e5aBZ
— Yogi Babu (@iYogiBabu) February 15, 2023
— Yogi Babu (@iYogiBabu) February 15, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments