தமிழ் நடிகருக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த தோனி.. வைரல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Thursday,February 16 2023]

தமிழ் திரை உலகின் பிரபல நடிகருக்கு டோனி தனது கையொப்பமிட்ட பேட்டை பரிசாக வழங்கிய புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக மட்டுமின்றி ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருபவர் யோகி பாபு. இவர் நடிகர் மட்டுமின்றி கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர் என்பதும் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் இவர் படக்குழுவினர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் யோகி பாபு தனது சமூக வலைத்தள பக்கத்தில் தோனி கையொப்பமிட்டு பரிசாக கொடுத்த கிரிக்கெட் பேட்டை கையில் வைத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் யோகி பாபு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவரும் ’ஜெயிலர்’ திரைப்படம் உள்பட சுமார் 20 படங்களில் நடித்து பிஸியான நடிகராக திரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரெண்டு கையையும் விட்டுவிட்டு ராய்ல் என்ஃபீல்ட் பைக் ஓட்டும் பிக்பாஸ் ரக்சிதா.. வைரல் வீடியோ..!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் சீரியல் நடிகையுமான ரக்சிதா, இரண்டு கையையும் விட்டுவிட்டு ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

'மாஸ்டர்' விஜய் பாணியில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த இளம் நடிகை.. வைரல் புகைப்படங்கள்..!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின் போது ரசிகர்களுடன் aவர் எடுத்த செல்பி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் இன்றளவில் அதிகம் நபர்களால் பகிரப்பட்ட புகைப்படம்

ஷாருக்கான் மேனேஜருக்கே ரூ.50 கோடி சொத்தா? அப்ப சம்பளம் எவ்வளவு?

ஷாருக்கானுக்கு ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்கள் இருக்கும் நிலையில் அவரது மேனேஜருக்கு சுமார் 50 கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அவருக்கு சம்பளம்

மனைவியிடம் திட்டு வாங்கிய ஆஸ்திரேலிய பவுலர்.. காரணம் அஸ்வின்?

பிரபல ஆஸ்திரேலிய பந்துவீச்சுவாளர் தான் மனைவியிடம் திட்டு வாங்கியதாகவும் அதற்கு அஸ்வின் தான் காரணம் என பேட்டி ஒன்றில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விஜய் பட நாயகியுடன் செம டான்ஸ் ஆடும் மீனா.. வைரல் வீடியோ!

 விஜய்யுடன் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்த நடிகையுடன் நடிகை மீனா செம டான்ஸ் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.