'எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க' வைரலாகும் பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இம்மாதம் 29ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தல தோனி நேற்றிரவு சென்னைக்கு வருகை தந்தார். அவரை சிஎஸ்கே அணியின் நிர்வாகிகள் அன்புடன் வரவேற்றனர். இதுகுறித்த வீடியோ சிஎஸ்கே அணியின் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு பெரிய விசில் அடிங்க
எங்க ஊரு சென்னைக்கு பெரிய விசில் அடிங்க
எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க
என்ற இந்த பாடல் சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின் தோனியின் ஆட்டத்தை ரசிக்க முடியாத நிலையில் உள்ள தல ரசிகர்களுக்கு விரைவில் வானவேடிக்கையை காணும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Every goose shall bump with First Day First Show feels! Just #StartTheWhistles! #HomeSweetDen ???? pic.twitter.com/DpQBIqahZe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 1, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments