தோனியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.. ஜட்டுவை தூக்கி வைத்து கொண்டாட்டம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக தல தோனி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த கொள்ள மாட்டார், அதே போல் தோல்வி அடைந்தாலும் கூட வருத்தத்தையும் வெளிக்காட்ட மாட்டார். உலக கோப்பையை இந்தியா வென்ற போது கூட அவர் நிதானமாகத்தான் இருந்தார் என்பதும் அவரது நிதானம் அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக குஜராத் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய நிலையில் தல தோனி உணர்ச்சிவசப்பட்டு முதல் முறையாக ஆனந்த கண்ணீர் வடித்ததை நேரலையில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்தனர்.
அதுமட்டுமின்றி கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜடேஜாவை அவர் தோள் மீது தூக்கி வைத்து கொண்டாடிய காட்சிகள் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தல தோனிக்கு உணர்ச்சிவசப்பட கூட தெரியுமா? வெற்றியை கொண்டாட கூட தெரியுமா? என்று பல கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். மொத்தத்தில் நேற்று கடைசி நேரத்தில் ஜடேஜா வெற்றியை கொடுத்ததை அடுத்து தல தோனி அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தது வீண் போகவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
The best video on the internet!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 29, 2023
MS Dhoni with such passion lifted Ravindra Jadeja. pic.twitter.com/P84nxpwR7A
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com