150 நாட் அவுட்: தல தோனிக்காக காத்திருக்கும் புதிய சாதனை

  • IndiaGlitz, [Saturday,April 28 2018]

நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கி தூள் கிளப்பி வருகிறது. குறிப்பாக தல தோனி களத்தில் இறங்கிவிட்டால் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு கிலி பிடித்து பிடிகிறது. ஆனால் பார்வையாளர்களுக்கோ சிக்ஸர் மழை பொழியும் வான வேடிக்கை கிடைப்பது உறுதியாகின்றது.

இந்த நிலையில் இன்று மும்பை மற்றும் சென்னை அணிகள் இந்த சீசனின் இரண்டாவது முறையாக மோதவுள்ளது. 11வது ஐபிஎல் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை அணியுடன் மோதிய சென்னை அணி, பிராவா அதிரடியால் வெற்றி பெற்று மும்பைக்க்கு அதன் சொந்த மண்ணில் அதிர்ச்சி கொடுத்தது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் போட்டி தல தோனிக்கு மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த போட்டி ஆகும். ஆம், தல தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக விளையாடும் 150வது போட்டி ஆகும்.

இதுவரை தோனி தலைமையில் விளையாடியுள்ள சென்னை அணி 149 போட்டிகளில் 88 போட்டிகளில் வெற்றியும் 60 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு இல்லை. சென்னை அணியின்  வெற்றி சதவீதம் 59.45 ஆகும். இன்றைய 150வது போட்டியிலும் வென்று தல புதிய சாதனை படைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

அடல்ட் ஹாரர் காமெடி படத்தை பொழுதுபோக்கு படமாக பார்க்கவேண்டும்: இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார்

'ஹர ஹர மகாதேவகி' என்ற அடல்ட் காமெடி படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார், அதே பாணியில் மீண்டும் இயக்கியுள்ள திரைப்படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து.

ரஜினி நல்லவர் என்றால் 8 கோடி தமிழர்கள் யார்? சீமான்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராடும் பெரும்பாலான கட்சிகள் போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை விட்டுவிட்டு ரஜினியை எதிர்ப்பதிலும் விமர்சனம் செய்வதிலும்

மெரீனாவில் போராட்டம்: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய பிரமாண்டமான ஜல்லிக்கட்டு போராட்டம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.

கழுதைக்கு ஹால் டிக்கெட் அனுப்பிய காஷ்மீர் அரசு

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தாசில்தார் பணிக்கான தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பும் பணியில் காஷ்மீர் அரசின் தேர்வுத்துறை ஈடுபட்டு வருகிறது.

சூர்யாவின் 'மாஸ்' தோல்வி குறித்து வெங்கட்பிரபு

சூர்யா, நயன்தாரா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய படம் 'மாஸ்'. இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போதிலும், வசூல் அளவில் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.