ஊரடங்கு நேரத்தில் மகளுடன் பைக் ரைடிங் செய்த 'தல'
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் ‘தல’ என்று அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, இந்த ஊரடங்கு விடுமுறையை தனது வீட்டிலும் பண்ணை வீட்டிலும் கழித்து வருகிறார். அவரும் அவருடைய மனைவி சாக்சியும் அவ்வப்போது ரசிகர்களுக்காக தங்களது சமூக வலைத்தளங்களில் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தல தோனி தனது பண்ணை வீட்டில் மகள் ஜீவாவுடன் பைக் ரைடிங் செய்யும் வீடியோ ஒன்றை சாக்சி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தல ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மகள் பைக்கில் பின்னால் உட்கார்ந்திருக்க தல பைக் ஓட்டும் அழகே தனி என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைத்தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஐபிஎல் தேதி அறிவித்தாலோ, அல்லது அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியோ, சிஎஸ்கே அணிக்கு தல தோனி மீண்டும் கோப்பையை பெற்று தர வேண்டும் என்று அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
Thala Suthifying, literally! ?????? #WhistlePodu VC: @SaakshiSRawat pic.twitter.com/0xpOxVoVET
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com