ஆள விடுங்க சாமி.. தோனியை பார்த்து தெறித்து ஓடிய தீபக் சஹார்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்றைய போட்டியில் தல தோனி களத்தில் இறங்கும் முன் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கும் போது அவரை பார்த்து தீபக் சாஹர் தெறித்து ஓடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி கொடுத்த 227 என்ற இலக்கை மேக்ஸ்வெல் மற்றும் டூ பிளஸ்சிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தால் நெருங்கிய நிலையில் தல தோனி இருவரையும் அபாரமான கேட்ச் பிடித்து அவுட் ஆக்கினார். அதன் பிறகு சென்னை அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தபோது 20வது ஓவரில் தான் தல தோனி களமிறங்கினார். அவர் களமிறங்கும் முன் பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவரது பேட் அருகில் உட்கார்ந்திருந்த தீபக் சாஹர் மீது படும் அளவுக்கு சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ‘ஆள விடுங்கடா சாமி’ என இடத்தை காலி செய்தார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தீபக் சாஹர் 14 கோடி கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார். ஆனால் அவர் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட சரியாக விளையாடவில்லை. இந்நிலையில் தல தோனி மற்றும் தீபக் சாஹரின் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் நகைச்சுவையாக கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
14 cr vangitu sumava ukara eruka odra..😂😂
— 🦋𝒥𝓊𝒿𝓊 ♡〽️SD🦁 (@jxjx7x_x) April 18, 2023
Chahar ~ Naney already injury la erukan 😂 pic.twitter.com/bulAmoOAHr
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments