'எல்ஜிஎம்' படத்தில் எதிர்பாராத ஆச்சரியம்.. தல ரசிகர்களுக்கு சரியான விருந்து..!

  • IndiaGlitz, [Saturday,July 22 2023]

தோனியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ’எல்ஜிஎம்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் தல தோனி ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி தோனி ஆகிய இருவரும் இணைந்து தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் தொடங்கி அதன் முதல் படமாக ’எல்ஜிஎம்’ என்ற தமிழ் படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்த நிலையில் தோனி, சாக்சி தோனி ஆகிய இருவரும் அதில் கலந்து கொண்டனர் என்பது தெரிந்தது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும், டிரைலர் ரிலீஸ்-க்கு பிறகு இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’எல்ஜிஎம்’ படத்தில் தல தோனி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து தல தோனி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது என்பது மிக குறிப்பிடத்தக்கது. தல தோனி எந்த கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.