புலிக்கு பிறந்தது பூனையாகுமா? 'தல' மகளின் பைக் ரைடிங்

தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி, மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி சிறந்த பைக் பிரியர் என்பது தெரிந்ததே. இந்த கொரோனா விடுமுறையிலும் தனது மகளை பின்னால் உட்கார வைத்து தனக்கு சொந்தமான இடத்தில் தல தோனி பைக்கில் ரைடு வரும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் ‘தல’ தோனியின் மகள் பைக்கில் உட்கார்ந்து ஆக்சிலேட்டரை அழுத்தும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது. தோனியின் மனைவி சாக்சி எடுத்திருக்கும் இந்த வீடியோவை தல ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

இந்த சிறு வயதிலேயே பைக் மீது ஆர்வம் கொண்டுள்ள தோனியின் மகள், புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபித்துவிட்டதாக தோனியின் ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதோடு, பல ஊடகங்களில் தலைப்பு செய்தியாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பின் இன்னும் களத்தில் இறங்காத தல தோனி, ஐபிஎல் போட்டியில் மீண்டும் களமிறங்கும் நாளை அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News

மேலும் ஒரு துயரச்சம்பவம்!!! லாரி விபத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிய 23 தொழிலாளிகள் பலி!!!

உத்திரப்பிரதே மாநிலத்தைச் சார்ந்த அவுரியா மாவட்டத்தில் லாரியில் பயணம் செய்த 23 புலம் பெயர்ந்த

வேப்பமர நிழல், கிணத்து குளியல், மண்வெட்டி வேலை, தாயம்: பிரபல நடிகரின் ஒருநாள் பொழுது

கொரோனா விடுமுறையில் பெரும்பாலான நடிகர், நடிகைகள் வீட்டில் இருந்து கொண்டு சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வரும் நிலையில் மதயானைக்கூட்டம், பரியேறும்பெருமாள்‌, பிகில் போன்ற படங்களில்

கொரோனா சிகிச்சைக்கு மட்டுமல்லாது பரவலைத் தடுக்கவும் இன்டர்ஃபிரான் a2b பயன்படும்!!!

கொரோனா சிகிச்சைக்கு குறிப்பிட்ட மருந்து எதையும் பரிந்துரைக்காத நிலையில் உலக நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின்

ராகவா லாரன்ஸ் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய குஜராத் முதல்வர்

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் கோடிக்கணக்கில் நிதியுதவி மட்டுமின்றி லட்சக்கணக்கானோர் பசியையும் தனது தாய் அறக்கட்டளை மூலம் போக்கி வரும் நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் என்பது தெரிந்ததே.

கொரோனா பாதிப்பு 477 பேர்கள், குணமானோர் 939 பேர்கள்: தமிழகத்தில் பாசிட்டிவ் அறிகுறி

தமிழகத்தில் கடந்த வாரம் வரை கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக இருந்த நிலையில் ஓரிரு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.