ஆன் ஸ்கிரீனிலும் ஆஃப் ஸ்கிரீனிலும் இவர் ஒரு ஜெண்டில்மேன். காஜல் அகர்வால்

  • IndiaGlitz, [Sunday,October 09 2016]

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது முதல்முறையாக தல அஜித்துடன் 'அஜித் 57' படத்தில் நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பை ஐரோப்பாவில் முடித்துவிட்டு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தயாராக இருக்கும் காஜல் அகர்வால் இன்று ரசிகர்களிடம் சமூக வலைத்தளம் ஒன்றின் மூலம் உரையாடினார்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் தல அஜித்துடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்க அந்த கேள்விக்கு பதில் கூறிய காஜல் அகர்வால் 'அற்புதம், ஆன் ஸ்க்ரீனிலும், ஆஃப் ஸ்க்ரீனிலும் அவர் ஒரு ஜெண்டில்மேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார்.
மேலும் இளையதளபதி விஜய்யுடன் மீண்டும் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என்று கேட்ட கேள்விக்கு நல்ல ஸ்க்ரிப்ட் கிடைத்தால் விரைவில் மீண்டும் இணைவோம் என்று கூறியுள்ளார்.