சென்னை திரும்பினார் தல அஜித். குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Friday,December 23 2016]

கடந்த சில நாட்களாக 'தல 57' படத்தின் படப்பிடிப்புக்காக பல்கேரியா சென்றிருந்த அஜித், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சென்னை திரும்பியுள்ளார். அவருடன் இயக்குனர் சிவா உள்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாளை மறுநாள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தல அஜித் கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளார்.

அஜித் சென்னை திரும்பியுள்ளதை சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோ உறுதி செய்துள்ளன. அஜித்தும் சிவாவும், விமானத்தில் உள்ளது போன்ற ஒரு புகைப்படமும், சென்னை விமான நிலையத்தில் இருந்து அஜித் வெளியேறும் ஒரு வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இண்டர்போல் அதிகாரியாக அஜித் நடித்துள்ள 'அஜித் 57' படத்தில் அவருடைய மனைவியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும் வில்லனாக விவேக் ஓபராய் மற்றும் ஒரு முக்கிய கேரக்டரில் அக்சராஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினர் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளதாகவும், வரும் பிப்ரவரிக்குள் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விஜய்சேதுபதியின் 'புரியாத புதிர்'. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்

2016ஆம் ஆண்டு விஜய்சேதுபதி நடித்த 'சேதுபதி', 'காதலும் கடந்து போகும்', 'இறைவி', 'தர்மதுரை', 'ஆண்டவன் கட்டளை', 'றெக்க' ஆகிய படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் திருப்திகரமான வசூலை கொடுத்தது.

கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிறது தனுஷின் தோட்டா

தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் 85% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது

த்ரிஷாவாக மாற ஆசைப்படும் விஷால்

விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவான 'கத்திச்சண்டை' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்று விஷால் சமூக வலைத்தளம் ஒன்றில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடினார்.

2016ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர். அஸ்வினை தேர்வு செய்த ஐசிசி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னனி ஆல்ரவுண்ரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் இந்த ஆண்டுக்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை பெற்றுள்ளார்.

ஜெயலலிதாவிடம் பாராட்டு பெற்ற சிற்பிக்கு குவியும் சிலை ஆர்டர்கள்

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிற்பி ஒருவர் செய்த பல சிலைகளை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததோடு, அவரது சிலை அமைப்பையும் பலமுறை பாராட்டியுள்ளார்.