சல்யூட் வைத்த காவலர்களுக்கு கைக்குலுக்கள்… தல அஜித்தின் அல்டிமேட் வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நம்ம தல அஜித் தனக்கு சல்யூட் அடிக்கும் காவலர்களுக்கு கை குலுக்குகிறார். அதோடு நன்றாக இருக்கிறீர்களா? என விசாரித்த காவலர்களைப் பார்த்து தலையாட்டி விட்டு கையெடுத்தும் கும்பிடுகிறார். இப்படி ஒரு வீடியோ காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியது. இந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த அஜித்தின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோ கோயம்புத்தூர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் விமான நிலையத்தை விட்டு நடிகர் அஜித் வெளியே வருகிறார். அவரைப் பார்த்த காவலர்கள் சல்யூட் வைக்கின்றனர். கூடவே அந்தக் காவலர்கள் நல்லா இருக்கீங்களா எனப் பாசம் பொங்க கேட்கின்றனர். அந்த வார்த்தைகளை கேட்ட தல உடனே தலையாட்டி விட்டு அனைத்து காவலர்களுக்கும் கைக்குலுக்கிறார்.
கூடவே கையெடுத்தும் கும்பிடுகிறார். சும்மாவே தலைக்கு ரசிகர்கள் பட்டாளம் ஜாஸ்தி. இந்தக் காட்சி இணையத்தில் வெளியானதும் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து விட்டு, வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Unseen Video. #Thala #Ajith ❤#Valimai pic.twitter.com/4ecWTDRuhg
— Ajith Network (@AjithNetwork) December 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments