சல்யூட் வைத்த காவலர்களுக்கு கைக்குலுக்கள்… தல அஜித்தின் அல்டிமேட் வீடியோ!!!

  • IndiaGlitz, [Saturday,December 26 2020]

 

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழும் நம்ம தல அஜித் தனக்கு சல்யூட் அடிக்கும் காவலர்களுக்கு  கை குலுக்குகிறார். அதோடு நன்றாக இருக்கிறீர்களா? என விசாரித்த காவலர்களைப் பார்த்து தலையாட்டி விட்டு கையெடுத்தும் கும்பிடுகிறார். இப்படி ஒரு வீடியோ காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகியது. இந்த வீடியோ காட்சிகளைப் பார்த்த அஜித்தின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோ கோயம்புத்தூர் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் விமான நிலையத்தை விட்டு நடிகர் அஜித் வெளியே வருகிறார். அவரைப் பார்த்த காவலர்கள் சல்யூட் வைக்கின்றனர். கூடவே அந்தக் காவலர்கள் நல்லா இருக்கீங்களா எனப் பாசம் பொங்க கேட்கின்றனர். அந்த வார்த்தைகளை கேட்ட தல உடனே தலையாட்டி விட்டு அனைத்து காவலர்களுக்கும் கைக்குலுக்கிறார்.

கூடவே கையெடுத்தும் கும்பிடுகிறார். சும்மாவே தலைக்கு ரசிகர்கள் பட்டாளம் ஜாஸ்தி. இந்தக் காட்சி இணையத்தில் வெளியானதும் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து விட்டு, வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

Unseen Video. #Thala #Ajith#Valimai pic.twitter.com/4ecWTDRuhg

— Ajith Network (@AjithNetwork) December 24, 2020

More News

ராகவா லாரன்ஸ் படத்தை இயக்கும் பிரபல தயாரிப்பாளர்!

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்சயகுமார் நடிப்பில் உருவாகிய 'லட்சுமி' என்ற திரைப்படம் கடந்த  தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாகியது என்பது அனைவரும் அறிந்ததே.

திருமணத்திற்கு பின்னர் புது பிசினஸை தொடங்கிய காஜல் அகர்வால்!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று திரும்பிய பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்

வெளியே வந்த அனிதாவின் முதல் பதிவு: என்ன சொன்னார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அனிதா என்பது அனைவரும் அறிந்ததே. தனித்தன்மையுடனும், அர்ச்சனா, பாலாஜி ஆகிய இரண்டு குரூப்புகளில்

17ஆம் நூற்றாண்டின் வீரமங்கை கேரக்டரில் நயன்தாரா? வைரலாகும் தகவல்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது