அஜித்தின் 'ஆலுமா டோலுமா' வின் அடுத்த சாதனை

  • IndiaGlitz, [Tuesday,January 31 2017]

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய 'ஆலுமா டோலுமா' என்ற பாடல் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டை பெற்றது. 'கொலைவெறி' பாடலுக்கு பின் இந்த பாடல் அனிருத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 'ஆலுமா டோலுமா' ஏற்கனவே பல சாதனைகள் புரிந்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு சாதனையாக இந்த பாடலுக்கு யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் 50000க்கும் மேற்பட்ட லைக்குகளை இந்த பாடல் பெற்று சாதனை செய்துள்ளது. இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஏற்படுத்தி கொண்டாடி வருகின்றனர்.

அஜித்தின் 24 ஆண்டுகால திரையுலக வாழ்வில் இதுபோன்ற சாதனையை அவர் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வங்கிக்கணக்கு-ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை. ஆர்பிஐ

கடந்த நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு எடுத்த முடிவை அடுத்து, வங்கிக்கணக்கில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

எனக்கு பிடித்த செக்ஸ் பொசிஷன். பிரபல நடிகையின் ஓப்பன் டாக்

பிரபல பாலிவுட் இளம் நடிகை அலியாபட், 'ஹைவே', 2 ஸ்டேட்ஸ் உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர். ராசியான நடிகை என இயக்குனர்களால் முத்திரை குத்தப்பட்டவர் என்றாலும் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது அலியா பட்-இன் இன்னொரு பொழுதுபோக்கு...

இரட்டிப்பு மகிழ்ச்சியில் 'மொட்டசிவா கெட்டசிவா' படக்குழு

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான 'மொட்டசிவா கெட்டசிவா' திரைப்படம் பல தடைகளை கடந்து விரைவில் திரைக்கு வரவுள்ளதாக வெளிவந்த செய்தியினை நேற்று பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது...

மணிரத்னம்சுஹாசினி தம்பதியின் மகத்தான முடிவு

மக்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள் செய்து வரும் தொண்டு நிறுவனங்களில் ஒன்று சாகா' என்ற தொண்டு நிறுவனம். இந்நிறுவனம் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி மற்றும் உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வை செய்து வருகின்றது...

ஆட்டோவுக்கு தீ வைத்த பெண் போலீஸ் பிடிபட்டாரா? பரபரப்பு தகவல்

சென்னை மெரீனாவில் நடைபெற்ற மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி தினத்தன்று மாணவர்களை போலிசார் கலைக்க முயன்றனர்...