தளபதி விஜய்யின் 'கோட்' ரிலீஸ்.. முதல் நபராக வாழ்த்து கூறிய தல அஜித்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் விஜய், வெங்கட் பிரபு மற்றும் ‘கோட்’ படத்தின் குழுவினர்களுக்கு முதல் நபராக தல அஜித் வாழ்த்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிய ‘கோட்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்டுகள் குவிந்து வருவதால் இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படம் வெற்றி அடைய வேண்டும் என்று பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இன்று அதிகாலை ஒரு மணிக்கு விஜய், வெங்கட் பிரபு மற்றும் கோட் படத்தின் குழுவினர்களுக்கு தல அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளதாக வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
எனது நெருங்கிய நண்பரான அஜித், எனக்கும் விஜய்க்கும் கோட் குழுவினருக்கும் முதல் நபராக வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு எங்களது நன்றி’ என்று வெங்கட் பிரபு சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Thank q #Thala #AK my anna for the first wish for @actorvijay na, me and team #GOAT we all love u❤️🤗😘 pic.twitter.com/81i7biJrBm
— venkat prabhu (@vp_offl) September 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments