அஜீத் நடிப்பில் 'பாட்ஷா 2'. சுரேஷ்கிருஷ்ணாவின் ஆசை

  • IndiaGlitz, [Saturday,September 12 2015]

நேற்று முன் தினம் நடைபெற்ற ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் 90வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், "பாட்ஷா படம் போல் இன்னொரு படம் வர வாய்ப்பில்லை' என்று கூறியதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் இந்த பேச்சால் 'பாட்ஷா' படத்தின் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா கூறியதாவது: "நான் இயக்கிய 'பாட்ஷா' படத்தை பற்றி ரஜினியும், மற்றவர்களும் இன்னமும் பேசி வருவது எனக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கூறுவதுபோல், உண்மையிலேயே பாட்ஷா' படம் போன்று இன்னொரு படம் எடுக்க முடியாது. இந்த படத்தை அந்தளவுக்கு நாங்கள் அணுஅணுவாக ரசித்து எடுத்திருந்தோம். அதனால்தான் மக்கள் மனதில் இன்றும் இப்படம் நிலைத்து நிற்கிறது.

அஜித்தை வைத்து பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை நான் அஜித்தை சந்தித்து இதுகுறித்து பேசியது கிடையாது. அஜித் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். அவரை வைத்து பாட்ஷா மாதிரியான ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அது அமைந்தால் கண்டிப்பாக அவருக்காக கதை அமைத்து படம் இயக்குவேன்" என்று கூறியுள்ளார்.

சுரேஷ் கிருஷ்ணாவின் ஆசையை அஜீத் நிறைவேற்றுவாரா? அப்படியே அஜீத் நடிக்க ஒப்புக்கொண்டாலும் 'பாட்ஷா' படத்திற்கு இணையாக அதன் இரண்டாம் பாகம் அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

நான்கு நாடுகளில் படமாகிறது 'சிங்கம் 3'

சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'பசங்க 2' படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது...

'புலி' படத்தில் நடித்த பிரபல நடிகர் விவாகரத்து?

கன்னட சூப்பர் ஸ்டாரும் இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் வில்லன் நடிகருமான சுதீப் தனது மனைவியை விவாகரத்து செய்ய இருப்பதாக கூறப்படுகிறது...

'வாழும் கலை' ஸ்ரீரவிசங்கர் கமல்ஹாசனை சந்தித்தது ஏன்?

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் கனவு திட்டங்களில் ஒன்று 'தூய்மை இந்தியா' திட்டம். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த

'யட்சன்' திரைவிமர்சனம்

பிரபல எழுத்தாளர்கள் சுபா, ஜெயம் சகோதரர்களுடன் இணைந்து சமீபத்தில் கொடுத்த 'தனி ஒருவன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதால், அதே எதிர்பார்ப்போடு ...

அஜீத்தின் 'காதல் கோட்டை' பாணியில் 'ககக போ' திரைப்படம்?

இயக்குனர் பி.எஸ்.விஜய் என்பவர் இயக்கி வரும் 'ககக போ' என்ற படத்தில் சாக்ஷி அகர்வால் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.....