ஆரம்ப விலை ரூ.50 கோடி. அஜித் படத்தின் அமோக வியாபாரம்

  • IndiaGlitz, [Tuesday,March 14 2017]

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்னும் ஒருசில நாட்களில் பல்கேரியாவில் தொடங்கவிருப்பதால் இந்த படத்தின் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தையையும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட் எகிறியுள்ளதோடு படமும் படு ரிச்சாக வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையின் தொகை ரூ.50 கோடியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ரிலீஸ் உரிமையை பெற போட்டி அதிகமாகும் பட்சத்தில் இன்னும் தொகை அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தை அடுத்து இந்த ஆண்டு அதிக தொகைக்கு வியாபாரம் ஆகும் படம் 'விவேகம்' படமாகத்தான் இருக்கும் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக செய்திகள் பரவி வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அருண்விஜய்யுடன் மீண்டும் கூட்டணி சேரும் பிரபல இயக்குனர்

சமீபத்தில் வெளியான அருண்விஜய்யின் 'குற்றம் 23' என்ற மெடிக்கல் க்ரைம் திரைப்படம் தமிழகம் முழுவதும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

ஆளுங்கட்சி ஊடகங்களில் முதல்வர் பெயர் இருட்டடிப்பா?

பொதுவாக ஆளுங்கட்சி ஊடகம் என்றாலே அரசுக்கு ஜால்ரா போடும் வகையிலும், முதல்வரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகத்தான் இருக்கும்.

இதுக்கு கூட லஞ்சமா? இந்த தலைமை ஆசிரியையை என்ன செய்யலாம்?

மாதா, பிதா, குரு தெய்வம் என தாய் தந்தையர்களுக்கு பிறகு தெய்வமாக மதிப்பளிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள்.

நான் சொல்லாத விஷயத்தை எழுதி வரும் உப்புமா இணையதளங்கள். நடிகை கஸ்தூரி ஆவேசம்

சமீபத்தில் நடிகை கஸ்தூரி கூறியதாக ஒருசில இணையதளங்களில் சர்ச்சைக்குரிய செய்தி ஒன்று மிக வேகமாக பரவி வந்தது. சுசித்ரா டுவிட்டர் பிரச்சனைக்கு இணையாக இந்த செய்தி மிக வேகமாக பரவி வந்த நிலையில் இந்த செய்தி குறித்து நடிகை கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். வெற்றிக்கனியை ருசிப்பது யார்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இரு அணிகளாக பிரிந்துள்ள சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியினர் தங்களுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கின்றது என்பதை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுக&