அஜித்தின் விவேகம்: தமிழகம், இந்தியா, உலக வசூல் விபரம்

  • IndiaGlitz, [Thursday,August 31 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' ரிலீஸ் ஆகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் தற்போது ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

தமிழகத்தில் 'விவேகம்' சுமார் 54-55 கோடி வசூல் செய்துள்ளது. ஒரு வாரத்தில் வசூல் செய்த படங்களில் 'பாகுபலி 2' படத்தை அடுத்து இந்த படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

சென்னையில் ரூ.7.14 கோடி, கோவையில் ரூ.9 கோடி, திருச்சி-தஞ்சையில் ரூ.5 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் கேரளாவில் ரூ.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.8 கோடியும் ஆந்திராவில் ரூ.7 கோடியும் வட இந்தியாவில் ரூ.2 கோடியும் என இந்தியாவில் மொத்தம் ரூ.77 கோடி வசூல் செய்துள்ளது.

வெளிநாட்டு வசூல் ரூ.25-27 கோடியை சேர்த்தால் இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

More News

எவ்வளவோ விளையாட்டுகள் உள்ளது. புளூவேலில் ஏன் சிக்க வேண்டும்? காவல்துறை ஆணையர் அறிவுரை

உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று புளுவேல் என்ற எமனிடம் சிக்கி அதிலிருந்து வெளியே வரவிடாமல் தவிக்கின்றனர். இதன் உச்சகட்டமாக பலர் உயிரையே மாய்த்து கொள்வதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது...

'விவேகம்' காஜல் அகர்வாலின் 'மோர்ஸ் கோட்' குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

கோலிவுட் திரையுலகின் பல திரைப்படங்கள் நாம் இதுவரை கேள்விப்படாத பல விஷயங்களை நமக்கு கற்று கொடுத்துள்ளது. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்' சுனாமியையும், ஏ.ஆர்.முருகதாஸின் 'ஏழாவது அறிவு' போதிதர்மரையும், துப்பாக்கி திரைப்படம் ஸ்லீப்பர் செல்லையும் நமக்கு கற்று கொடுத்தது...

பள்ளி சீருடையில் ரத்தம்: ஆசிரியை கண்டித்ததால் மாணவி தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்துவந்த 13 வயது சிறுமியை வகுப்பாசிரியை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

உதயநிதி, சந்தானம் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தவர் நகைச்சுவை நடிகை மதுமிதா...

சென்னை வசூலில் புதிய வரலாறு ஏற்படுத்திய அஜித்தின் 'விவேகம்'

ஒரு நல்ல படத்தின் வசூலை எத்தனை எதிர்மறை விமர்சனங்களாலும் தடுக்க முடியாது என்பதை அஜித்தின் 'விவேகம்' மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது...