அஜித்தின் விவேகம்: தமிழகம், இந்தியா, உலக வசூல் விபரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த 'விவேகம்' ரிலீஸ் ஆகி ஒருவாரம் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் தற்போது ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.
தமிழகத்தில் 'விவேகம்' சுமார் 54-55 கோடி வசூல் செய்துள்ளது. ஒரு வாரத்தில் வசூல் செய்த படங்களில் 'பாகுபலி 2' படத்தை அடுத்து இந்த படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
சென்னையில் ரூ.7.14 கோடி, கோவையில் ரூ.9 கோடி, திருச்சி-தஞ்சையில் ரூ.5 கோடி வசூல் செய்துள்ள இந்த படம் கேரளாவில் ரூ.5 கோடியும், கர்நாடகாவில் ரூ.8 கோடியும் ஆந்திராவில் ரூ.7 கோடியும் வட இந்தியாவில் ரூ.2 கோடியும் என இந்தியாவில் மொத்தம் ரூ.77 கோடி வசூல் செய்துள்ளது.
வெளிநாட்டு வசூல் ரூ.25-27 கோடியை சேர்த்தால் இந்த படத்தின் வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments