'விவேகம்' சென்சார் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,July 25 2017]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளும் முடிவடைந்து இறுதி காப்பி க்யூபில் பதிவாகி வருகிறது.
இந்த நிலையில் 'விவேகம்' திரைப்படம் சென்சாருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆன்லைன் மூலமே சென்சாருக்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்பதால் அதன் வரிசைப்படி இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து சான்றிதழ் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்சார் பணிகள் முடிந்ததும் இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. பெரும்பாலும் அந்த தேதி ஆகஸ்ட் 10 என்பதுதான் அனனவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

More News

வாரிசுகள் காட்டிய பச்சைக்கொடி: களமிறங்குவார்களா கமல்-ரஜினி?

கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அரசியலில் குதிக்கும் சூழ்நிலை தென்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...

ரூபா ஐபிஎஸ்: திரைப்படம் ஆகிறதா சசிகலா சலுகை விவகாரம்?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்று பெங்களூர் பார்ப்பன அக்ராஹர சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி ஜெயில் உயரதிகாரிகளுக்கு கைமாறிய சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது...

போதை பொருள் விவகாரத்தில் மேனேஜர் கைது குறித்து காஜல் அகர்வால் விளக்கம்

சமீபத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னனி நட்சத்திரங்கள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டின் மேல் விசாரணைக்கு ஆளானார்கள்...

14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்!

இந்தியாவின் 14வது ஜனாதிபதியாக சமீபத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த் அவர்கள் சற்று முன் பதவியேற்றார். அவருக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கெஹர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்...

'கக்கூஸ்' ஆவணப்பட பெண் இயக்குனர் திவ்யபாரதி திடீர் கைது

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக போராடிய மாணவி வளர்மதியை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் சற்றுமுன் பிரபல சமூகப் போராளியும், 'கக்கூஸ்' ஆவணப்பட இயக்குனருமான திவ்யபாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.