அஜித்தின் 'விவேகம்' வசூல் குறித்து ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்தி

  • IndiaGlitz, [Tuesday,August 29 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் வசூல் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் பல செய்திகள் அதிகாரபூர்வமற்ற செய்தியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. 'விவேகம்' படத்தை புரமோட் செய்யும் பெய்டு விமர்சகர்கள் வசூலை அதிகமாகவும், படத்திற்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் வசூலை குறைத்தும் கூறி வருவதால் உண்மையான வசூல் குறித்து குழப்ப நிலையே ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி பிசினஸ் ஊடகம் ஃபோர்ப்ஸ், 'விவேகம்' படத்தின் வசூல் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 42 நாடுகளில் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியான அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தபோதிலும் முதல் வாரயிறுதி வசூல் கணிசமாக இருந்துள்ளது.

$20 மில்லியன் செலவில் உருவான இந்த படம் முதல் வாரத்தில் இந்தியாவில் $10.9 மில்லியன் வசூல் செய்துள்ளதாகவும், வெளிநாடுகளில் $5.7 மில்லியன் ஆக மொத்தம் $16.6 மில்லியன் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் மிக விரைவில் 2014ஆம் ஆண்டு வெளியான 'வேதாளம்' வசூலை முறியடித்து விடும்

இந்த படத்தின் மொத்த வசூலில் சுமார் 50% தமிழ்நாட்டில் மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும், அதாவது $7.5 மில்லியன் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளது. தமிழக ரிலீஸ் உரிமை ரூ.52.7 கோடிக்கு இந்த படம் விலை போயுள்ள நிலையில் விநியோகிஸ்தர்கள் நல்ல லாபத்தை பெற வாய்ப்பு உள்ளது.

மேலும் சென்னையை பொருத்தவரையில் இந்த படத்தின் வசூல் இதுவரை அதிக வசூலை பெற்றிருந்த 'கபாலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் சாதனையை முறியடித்துள்ளது

இவ்வாறு ஃபோர்ப்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

More News

ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆரை யாராலும் கைப்பற்ற முடியாது: விவேக் ஜெயராமன் பதிலடி

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகளின் கூட்டம் நடந்தபோது நான்கு முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது...

ஊரை விட்டு ஓடுறேன்னு சொன்னவர் அரசியல் பேசுவது ஏன்? கமலுக்கு சரத்குமார் கேள்வி

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாக பரபரப்பான அரசியல் கருத்துக்களை கூறி வரும் நிலையில் ஜெயலலிதா இருக்கும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது மட்டும் அரசியல் பேசுவது ஏன்? என்று நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கேள்வி கேட்டுள்ளார்.

பிக்பாஸ் காஜலை மறந்துவிட்ட 'காலா' டான்ஸ் மாஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் டைட்டில் பாடல், மற்றும் கிளைமாக்ஸ் பாடல் ஆகிய இரண்டு பாடல்களுக்கும் ரஜினிக்கு நடனப்பயிற்சி அளித்துள்ளார் நடன இயக்குனர் சாண்டி.

காலையில் எடப்பாடி, மாலையில் ஸ்டாலின்: அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களின் சந்திப்பு

தமிழக அரசியல் சூழ்நிலை கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு எம்.எல்.ஏக்களும் இன்று ஆட்சியை மாற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளதால் இதுவரை இல்லாத வகையில் எம்.எல்.ஏக்களுக்கு அதிக மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது.

முதலமைச்சராக பழனிச்சாமியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால்..: நடிகர் செந்தில்

முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தையும் அகற்ற வேண்டும் என்று தினகரன் அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்...