அஜித்தின் 'விவேகம்' வசூல் குறித்து ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் வசூல் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் பல செய்திகள் அதிகாரபூர்வமற்ற செய்தியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. 'விவேகம்' படத்தை புரமோட் செய்யும் பெய்டு விமர்சகர்கள் வசூலை அதிகமாகவும், படத்திற்கு எதிராக விமர்சனம் செய்பவர்கள் வசூலை குறைத்தும் கூறி வருவதால் உண்மையான வசூல் குறித்து குழப்ப நிலையே ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி பிசினஸ் ஊடகம் ஃபோர்ப்ஸ், 'விவேகம்' படத்தின் வசூல் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: 42 நாடுகளில் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியான அஜித்தின் 'விவேகம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தபோதிலும் முதல் வாரயிறுதி வசூல் கணிசமாக இருந்துள்ளது.
$20 மில்லியன் செலவில் உருவான இந்த படம் முதல் வாரத்தில் இந்தியாவில் $10.9 மில்லியன் வசூல் செய்துள்ளதாகவும், வெளிநாடுகளில் $5.7 மில்லியன் ஆக மொத்தம் $16.6 மில்லியன் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் மிக விரைவில் 2014ஆம் ஆண்டு வெளியான 'வேதாளம்' வசூலை முறியடித்து விடும்
இந்த படத்தின் மொத்த வசூலில் சுமார் 50% தமிழ்நாட்டில் மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும், அதாவது $7.5 மில்லியன் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளது. தமிழக ரிலீஸ் உரிமை ரூ.52.7 கோடிக்கு இந்த படம் விலை போயுள்ள நிலையில் விநியோகிஸ்தர்கள் நல்ல லாபத்தை பெற வாய்ப்பு உள்ளது.
மேலும் சென்னையை பொருத்தவரையில் இந்த படத்தின் வசூல் இதுவரை அதிக வசூலை பெற்றிருந்த 'கபாலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களின் சாதனையை முறியடித்துள்ளது
இவ்வாறு ஃபோர்ப்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout