ஆட்டம் போட வைத்த 'ஆலுமா டோலுமா' டீசர்

  • IndiaGlitz, [Thursday,October 15 2015]

அஜீத் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 'வேதாளம்' படத்தின் 'ஆலுமா டோலுமா' என்ற பாடலின் டீசர் நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ரிலீஸாகி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கம்போல் இந்த பாடல் டீசரும் அதிகபட்ச பார்வையாளர்களையும் லைக்குகளையும் பெற்று வருகிறது.

'ஆலுமா டோலுமா' டீசர் வெளியான ஆறு மணி நேரத்தில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களையும், 20 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. அனிருத்தின் அட்டகாசமான இசை, அஜீத்தின் 'ரெட்' கெட்டப், டான்ஸ் மூவ்மெண்ட் ஆகியவை இந்த 22 வினாடிகள் டீசரில் உள்ள முக்கிய அம்சங்கள் ஆகும். 'தெறிக்க விடலாமா' என்ற பஞ்ச்சுடன் முடியும் இந்த டீசர் அஜீத் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் அளவில் உள்ளது.

'ஆலுமா டோலுமா' டீசரை அடுத்து இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளதாக உள்ளதால் அஜீத் ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகத்தில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஏழைக்குழந்தைகளின் கனவு நனவாக விஜய் கொடுத்த ரூ.5 லட்சம்

இளையதளபதி விஜய் சத்தமில்லாமலும் விளம்பரங்கள் இன்றியும் பல உதவிகளை செய்து வருவதை....

தல ரசிகர்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்கு இன்ப அதிர்ச்சி

'தல அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் டிராக்லிஸ்ட் சற்று முன்னர் வெளியாகி, இணையதளங்களில் மிக வேகமாக பரவி...

'வேதாளம்' டிராக் லிஸ்ட். முழுவிபரம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படத்தின் பாடல்கள் வரும் 16ஆம்...

மணிரத்னம் படத்தில் பிரபல நடிகையின் கணவர்?

'ஓகே கண்மணி' வெற்றிப்படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும்...

'குற்றம் கடிதல்' படத்திற்கு மேலும் ஒரு விருது

இயக்குனர் பிரம்மாவின் 'குற்றம் கடிதல்' திரைப்படம் பல விருதுகளை பெற்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது...