close
Choose your channels

'தல 60' படத்தில் அஜித் கேரக்டர் குறித்த தகவல்

Monday, August 26, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அவரது அடுத்த படமான 'தல 60' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் எச்.வினோத் இயக்கவுள்ள 'தல 60' திரைப்படத்தில் அஜித்தின் கெட்டப் வித்தியாசமாக இருக்கும் என்பது சமீபத்தில் குற்றலீஸ்வரனுடன் அஜித் இருந்த புகைப்படம் நிரூபணம் செய்தது. பெப்பர் சால்ட் தோற்றத்திற்கு விடை கொடுத்த அஜித், கருமையான முடியுடன் மீசை, தாடியின்றி இருந்தது அஜித் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது

இந்த நிலையில் 'தல 60' திரைப்படத்தில் அஜித் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக அவர் இன்னும் ஸ்லிம் ஆக பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித் ஏற்கனவே 'என்னை அறிந்தால்', 'மங்காத்தா', ஆஞ்சநேயா' உள்பட ஒருசில படங்களில் போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த படத்தின் போலீஸ் கேரக்டர் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment