ரஜினியின் ட்வீட்டால் அடித்துக்கொள்ளும் விஜய்-அஜித் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

தமிழ் திரையுலகினர் தற்போது சந்தித்து வரும் ஜிஎஸ்டி மற்றும் தமிழக அரசின் கேளிக்கை வரி பிரச்சனைக்கு அனைத்து திரையுலகினர்களும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ரஜினி போன்ற பெரிய நடிகர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டால் விரைவில் தீர்வு கிடைக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கையாக இருந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று தனது டுவிட்டரில் கேளிக்கை வரியை குறைத்து லட்சக்கணக்கான சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தனது கோரிக்கையாக வைத்தார்.
இந்த நிலையில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதில் தானாக நுழைந்து முட்டி மோதிக்கொள்ளும் அஜித், விஜய் ரசிகர்கள் ரஜினியின் இந்த டுவிட்டிலும் கடந்த சில மணி நேரங்களாக மோதி வருகின்றனர். விஜய் இன்னும் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று அஜித் ரசிகர்களும், அஜித் இந்த பிரச்சனைக்கு மட்டுமின்றி எந்த பிரச்சனைக்குமே குரல் கொடுக்க மறுப்பது ஏன் என்று விஜய் ரசிகர்களும் காரசாரமாக மோதிக்கொண்டு வருகின்றனர். ஒருசிலர் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளையும் பயன்படுத்தி பதிவு செய்கின்றனர்.
அஜித், விஜய் மட்டுமின்றி அனைத்து நடிகர்களும், தயாரிப்பாளர்களும் டெக்னீஷியன்களும் இந்த விஷயத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது முக்கியம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கமல், ரஜினி குரல் கொடுத்துவிட்டனர். பிரச்சனையை தீர்க்க முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தையும் நடந்து வருகின்றது. இந்த நிலையில் எந்த நேரத்திலும் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடைக்கலாம். ஒருவேளை பிரச்சனை நீடித்தால் அஜித், விஜய் உள்பட அனைவரும் கண்டிப்பாக குரல் கொடுப்பார்கள். எனவே இந்த விஷயத்தில் அஜித், விஜய் ரசிகர்கள் தேவையில்லாமல் மோதிக்கொள்வதை தவிர்ப்பதே நல்லது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது.

More News

பீர் ஆரோக்கிய பானம் என்றால் மருந்துக்கடையில் விற்பீர்களா? அமைச்சருக்கு பிரபல நடிகை கேள்வி

தமிழகம் போலவே நமது அண்டை மாநிலமான ஆந்திரபிரதேசத்திலும் மதுவுக்கு எதிராக பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன...

பாவனா வழக்கில் திடீர் திருப்பம்: கைதாகும் பிரபலங்கள்?

பிரபல தமிழ், மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் விரைவில் மலையாள சினிமாவின் நட்சத்திர ஜோடி திலீப்-காவ்யா மாதவன் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.,

ஆதார் இருந்தால்தான் திருமணம்! மத்திய அரசின் அடுத்த அதிரடி

கடந்த சில மாதங்களாகவே இந்திய குடிமகனின் அடையாள அட்டையான ஆதார் அட்டை எண்ணை அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ரேசன் கார்டு, பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு, பான் அட்டை உள்பட பல ஆவணங்களில் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது...

கேளிக்கை வரி விவகாரம்: லைகா நிறுவனம் அதிரடி முடிவு

கடந்த 1ஆம் தேதி ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்ததில் இருந்தே தமிழ்த்திரையுலகம் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி தமிழக அரசின் 30% வரியும் கட்ட வேண்டிய நிலை திரையுலகினர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்...

ரூ.500க்கு 4ஜி வோல்ட் இ போன்; ஜியோவின் அடுத்த ஆஃபர்

இந்திய தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ.