'தல 56' படத்தின் தமிழக வியாபாரம் முடிந்தது.
Send us your feedback to audioarticles@vaarta.com
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சென்னை பின்னி மில்லில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாக ஏற்கனவே பார்த்தோம். பாண்டிச்சேரி சுரேஷ், வட ஆற்காடு மற்றும் தென்னாற்காடு ஏரியாவின் ரிலீஸ் உரிமையை பெற்றதை அடுத்து இந்த படத்தின் மற்ற ஏரியாக்களின் உரிமைகளும் மளமளவென விற்பனையாகிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
செங்கல்பட்டு மற்றும் சென்னை பகுதியின் ரிலீஸ் உரிமையை எம்.கே எண்டர்பிரைசஸ் பெற்றுள்ளதாகவும், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, சேலம் மற்றும் பாண்டிச்சேரி ஏரியாக்களின் உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் பெற்றுள்ளதாகவும், வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கிட்டத்தட்ட தமிழக ஏரியாக்களின் வியாபாரம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், கேரள, கர்நாடகா மற்றும் ஆந்திரா-தெலுங்கானா பகுதிகளின் ரிலீஸ் உரிமை குறித்த வியாபாரம் பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
அஜீத் டாக்சி டிரைவராகவும், ஸ்ருதிஹாசன் வழக்கறிஞராகவும் நடித்து வருவதாக கூறப்படும் இந்த படத்தில் லட்சுமிமேனன், கபீர்சிங், அஸ்வின், சூரி, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்து வருகின்றானர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை அதிக பொருட்செலவில் ஏ.எம்.ரத்னம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார். மேலும் இந்த இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments