தல அஜித் முதன்முதலாக எடுக்கும் புதிய முயற்சி

  • IndiaGlitz, [Wednesday,February 14 2018]

இயக்குனர் சிவா இயக்கத்தில் மீண்டும் தல அஜித் நடிக்கவுள்ள 'விசுவாசம்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் தல அஜித் தனது 25 ஆண்டுகால திரையுலக வாழ்வில் முதல்முறையாக ஒரு புதிய முயற்சியை எடுக்கவுள்ளார். ஆம், விசுவாசம் படத்தில் அஜித் ஒரு பாடலை பாடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் இசையில் அஜித் ஒரு பாடலை பாட சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையெனில் அஜித் ரசிகர்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை

அஜித், நயன்தாரா மீண்டும் ஜோடி சேரவுள்ள 'விசுவாசம்' திரைப்படம் ரசிகர்களுக்கு வரும் தீபாவளி விருந்தாக திரைக்கு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.                                                                                                                                                 

More News

ஆளே மாறிய மீரா ஜாஸ்மின்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிசியான நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். மாதவனுடன் இவர் நடித்த 'ரன்', விஷாலுடன் நடித்த 'சண்டக்கோழி' போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகின.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பா.ரஞ்சித், இந்த படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியில் விறுவிறுப்பாக இருக்கும்

ஒரே வாரத்தில் அகில இந்திய பிரபலங்களை ஓரங்கட்டிய புருவ டான்ஸ் அழகி

புருவ டான்ஸ் அழகி பிரியாவாரியர் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

பிப்ரவரி 15ல் கமல்ஹாசனின் முக்கிய அரசியல் நிகழ்வு

உலகநாயகன் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விபரங்களை அதிகாரபூர்வமாக முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த மண்ணில் அறிவிக்கவுள்ளார்.

ரஜினிக்கு 14 வினாடி, விஜய்க்கு 10 வினாடி: அதிர்ச்சியில் திரையுலகம்

ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் 14 வினாடி சண்டைக்காட்சி ஒன்று இணையதளத்தில் லீக் ஆகி