உலக அளவில் டிரெண்டை ஏற்படுத்திய அஜித்தின் ஒரே ஒரு ஸ்டில்

  • IndiaGlitz, [Friday,March 17 2017]

தல அஜித் படம் வெளிவந்தாலும், வெளிவராவிட்டாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் அஜித் குறித்த செய்தி வெளியாகி அது மாநில அளவில், இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருவது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது.

கடந்த ஆண்டு அஜித் நடித்த படம் எதுவும் வரவில்லை என்றாலும் அவர் குறித்த செய்திகள் வெளிவராத நாட்களே இலலை என்று கூறலாம். இந்நிலையில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று பல்கேரியாவில் தொடங்கியது.

இந்த படப்பிடிப்பு நடந்தபோது எடுக்கப்பட்ட அஜித்தின் புகைப்படம் ஒன்று நேற்று வெளியாகி இணையதளங்களே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிக வேகமாக பரவி வந்தது. குறிப்பாக டுவிட்டரில் உலக அளவில் இந்த புகைப்படம் டிரெண்ட் ஆகியது. கிழிந்த சட்டையுடன் ரத்தக்காயங்களுடன் அஜித் இருக்கும் இந்த ஸ்டில்லை பார்க்கும்போது இந்த படத்திற்காக அஜித் எந்த அளவுக்கு தனது உழைப்பை கொட்டியிருக்கின்றார் என்பதை அறிய முடிகிறது.

பல்கேரியாவில் தற்போது நடைபெற்று வரும் 'விவேகம்' படப்பிடிப்பில் கிளைமாக்ஸ் மற்றும் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அஜித், காஜல் அகர்வால், அக்சரா ஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

சிம்புவின் அஸ்வின் தாத்தா' டீசர் ரிலீஸ் தேதி

முதன்முதலாக சிம்பு மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்த படத்தில் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் ஸ்மார்ட் இளைஞன் என மூன்று கேரக்டர்களில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் இரண்டு கேரக்டர்களின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் மூன்றாவ

சசிகுமாரின் 'கொடிவீரன்' படத்தில் முதன்முதலாக பிரபல நாயகி

'குட்டிப்புலி' இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் சசிகுமார் நடிக்கவுள்ளார் என்பதும் அந்த படத்தின் டைட்டில் 'கொடிவீரன்' என்பதும் ஏற்கனவே அறிந்ததே

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர் அறிவிப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சசிகலா அணியின் சார்பில் அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் கள

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' பாடலுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்குமா?

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்'.

சிம்புவுடன் இணையும் மூன்றாவது இசையமைப்பாளர்

தமிழ்திரையுலகில் சகலகலா வல்லவனாக அனைத்து துறையிலும் கால்பதிக்கும் ஒருசிலரில் சிம்புவும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே