close
Choose your channels

பல்கேரியா கிளம்பினார் தல அஜித்

Thursday, December 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இறுதியஞ்சலி செலுத்துவதற்காக பல்கேரிய படப்பிடிப்பில் இருந்த தல அஜித், சுமார் 16 மணி நேரம் பயணம் செய்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேராக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அம்மா சமாதிக்கு அஞ்சலி செலுத்திய அஜித், பின்னர் மூத்த பத்திரிகையாளர் சோ அவர்களுக்கும் நேரில் அஞ்சலி செலுத்தினார்

இந்நிலையில் நேற்று மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து அஜித் பல்கேரியா கிளம்பினார். இன்று இரவு அவர் பல்கேரியா சென்று அடைவார் என்றும் நாளை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கேரியாவில் இருந்து சென்னை மற்றும் சென்னையில் இருந்து பல்கேரியா என சுமார் 12,000 கிமீ தூரத்தை ஒருசில நாட்களில் அஜித் பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment