அஜித்தின் அதிரடி ஓய்வு முடிவு

  • IndiaGlitz, [Thursday,January 21 2016]

'வேதாளம்' படத்தை முடித்தவுடன் முழங்கால் மற்றும் தோள்பட்டையில் சர்ஜரி செய்து கொண்ட தல அஜித், தற்போது விரைவாக குணமாகி வருவதாகவும், வரும் மே மாதம் ஆரம்பமாகவுள்ள அஜித்தின் 57 படத்திற்காக அவர் விரைவில் தயாராகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் சின்ன சின்ன உடற்பயிற்சிகள் செய்தும், உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடித்தும் வரும் அஜித் வெகுவிரைவில் பூரண குணமாகிவிடுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் தனது குடும்பத்தினர்களுடன் லண்டன் சென்று இரண்டு மாதம் முழு ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் அவர் சென்னையில் இருந்து லண்டனுக்கு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

லண்டனில் இருந்து பூரண குணமாகி சென்னை திரும்பியவுடன் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அஜித் லண்டனில் இருந்து திரும்பி வருவதற்குள் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

More News

'தெறி' படத்தில் எமிஜாக்சன் கேரக்டர் குறித்த புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிவடைந்த நிலையில்...

'தெறி' விஜய்யின் அறிமுகப்பாடல் குறித்த புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்...

விஜய்க்கு 5 நாட்களை மிச்சப்படுத்திய அட்லி

இளையதளபதி விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த 'தெறி'...

'அரண்மனை 2' சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த விபரங்கள்

சுந்தர் சி இயக்கிய 'அரண்மனை' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது 'அரண்மனை 2' ...

விஜய் குடும்பத்தில் இருந்து திரைக்கு வரும் இன்னொரு நபர்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தில் விஜய்யின் மகள் கேரக்டரில் நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே...