'தல' நியூலுக்: வைரலாகும் அஜித்தின் இளமை தோற்றம்

  • IndiaGlitz, [Saturday,October 05 2019]

தல அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவுள்ள ‘தல 60’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு அஜித் தயாராகிவிட்டார் என்பதை நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிய அஜித்தின் நியூலுக் புகைப்படங்கள் உறுதி செய்தது. தல 60’ படப்பிடிப்பிற்கு செல்ல விமான நிலையத்திற்கு நியூலுக்குடன் வந்த அஜித்துடன் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு செல்பி எடுத்தனர்.

கடந்த சில படங்களாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்த அஜித், அதற்கு விடைகொடுத்துவிட்டு தற்போது கருமையான தலைமுடி மற்றும் மீசைக்கு மாறியுள்ளார். இந்த லுக்கில் அஜித்தை பத்து வருடங்களுக்கு முன் பார்த்தது போல் இருப்பதாக ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

’தல 60’ திரைப்படத்தில் அஜித்தின் லுக் வித்தியாசமாகவும், இதுவரை இல்லாத அளவில் ஸ்டைலிஷாகவும் இருக்கும் என்று படக்குழுவினர் ஏற்கனவே கூறியிருந்த நிலையில் தற்போது அது உண்மை என்பது தெரிய வந்துள்ளது.