வித்யாபாலனுடன் ரொமான்ஸ்: தல அஜித்தின் அட்டகாசமான புதிய லுக்?

  • IndiaGlitz, [Wednesday,March 27 2019]

தல அஜித் நடித்து வரும் 'பிங்க்' ரீமேக் திரைப்படமான 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த படத்தில் நாயகிகள் காட்சிகள், நீதிமன்ற காட்சிகள் ஆகியவை படமாக்கப்பட்டு முடிந்த நிலையில் தற்போது அஜித்-வித்யாபாலன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் அஜித்தின் கெட்டப் ஏற்கனவே ஃபர்ஸ்ட்லுக்கில் வெளியான நிலையில் தற்போது அஜித்-வித்யாபாலன் ரொமான்ஸ் காட்சிகளுக்காக அஜித்தின் கெட்டப் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த புதிய லுக்கின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புதிய லுக்கில் ஷேவ் செய்யப்பட்டு, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் அட்டகாசமாக உள்ளார். இந்த லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பும், போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.