'தல 60' படத்திற்காக கெட்டப் மாறிய அஜித்

  • IndiaGlitz, [Wednesday,June 12 2019]

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அஜித், தனது அடுத்த படமான 'தல 60' படத்திற்கு தயாராகிவிட்டார்.

சமீபத்தில் தல அஜித் தனது மேனேஜர் வீட்டிற்கு சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அஜித் ஷேவ் செய்து, தலையிலும் வெகுவாக முடியை குறைத்துள்ளார். எனவே 'விஸ்வாசம்', நேர் கொண்ட பார்வை' ஆகிய இரண்டு படங்க்ளில் பார்த்த தாடி கெட்டப் 'தல 60' படத்தில் இருக்காது என்றும், இந்த படத்தில் அவரது லுக் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே 'தல 60' திரைப்படம் பைக் ரேஸ் குறித்த கதை என்று செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அவருடைய புதிய கெட்டப் குறித்தும் தகவல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'தல 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

ரஜினியின் 'தர்பார்' படப்பிடிப்பு முடிவது எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது

'சிந்துபாத்' படத்தின் கதை இதிகாச புராணக்கதையா?

விஜய்சேதுபதி நடித்த 'சிந்துபாத்' திரைப்படத்தின் இசை வெளீயீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்சேதுபதி பேசியதாவது:

ரஜினி, கமல் ஆதரவு யாருக்கு? விஷால் விளக்கம்

நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி என இரண்டு அணிகளில் இருந்து போட்டியிடும்

பாக்யராஜ் அணியின் 3 வேட்பாளர் மனுக்கள் தள்ளுபடியா?

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் விஷாலின் பாண்டவர் அணி மற்றும் பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி

வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்த மற்றொரு இயக்குனர்!

ஒரு திரைப்படத்திற்கு இயக்குனர் என்பவர் முதுகெலும்பு போன்றவர். அவர் இல்லாமல் ஒரு படம் உருவாக முடியாது. எனவேதான் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி முதல் முன்னணி நடிகர்கள்