'தல 60' படத்திற்காக கெட்டப் மாறிய அஜித்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அஜித், தனது அடுத்த படமான 'தல 60' படத்திற்கு தயாராகிவிட்டார்.
சமீபத்தில் தல அஜித் தனது மேனேஜர் வீட்டிற்கு சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அஜித் ஷேவ் செய்து, தலையிலும் வெகுவாக முடியை குறைத்துள்ளார். எனவே 'விஸ்வாசம்', நேர் கொண்ட பார்வை' ஆகிய இரண்டு படங்க்ளில் பார்த்த தாடி கெட்டப் 'தல 60' படத்தில் இருக்காது என்றும், இந்த படத்தில் அவரது லுக் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே 'தல 60' திரைப்படம் பைக் ரேஸ் குறித்த கதை என்று செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அவருடைய புதிய கெட்டப் குறித்தும் தகவல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'தல 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
Ammmadiyooo ??????
— KARAIKUDI HEAD AJITH FC ᴺᴷᴾ (@kkdi_thala_fc) June 12, 2019
Handsome Hunk Thala ??????
Thala I luv u ??#Thala60 Feed ??????#NerkondaPaarvai pic.twitter.com/jJ1lFhTBuZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com