அகில இந்திய அளவில் அஜித்துக்கு கிடைத்த பெருமை: கொண்டாடும் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Sunday,March 07 2021]

தல அஜித் நடிகராக மட்டுமின்றி மோட்டார் சைக்கிள் ரேஸ், கார் ரேஸ் உள்ளிட்ட பல துறைகளில் தனது முத்திரையை பதித்து இருக்கிறார் என்று அவ்வப்போது வெளிவந்த செய்திகளை பார்த்திருக்கிறோம். இந்த நிலையில் தற்போது துப்பாக்கி சுடும் போட்டியில் தனது திறமையை நிரூபித்துள்ளார்

கடந்த சில நாட்களாக சென்னை ரைபிள் கிளப்பில் அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் கலந்து கொண்டிருந்தார் என்றும் அது குறித்து வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்த செய்திகளையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது அவர் 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். மாநில அளவிலான போட்டியில் அஜித் தங்கம் வென்று உள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கவும் அஜித் தகுதி பெற்றுள்ளார். தமிழகத்திலிருந்து தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் தகுதி பெற்றவர் அஜித் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அகில இந்திய அளவில் அஜித்துக்கு துப்பாக்கி சுடும் போட்டியில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி அகில இந்திய அளவிலும் அவர் தங்கம் வெல்வார் என்று அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.