இவர்கள் மூவரும் நாணயத்தின் மூன்று பக்கங்கள்: 30 ஆண்டு திரையுலக வாழ்வு குறித்து தல அஜித்!

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

தல அஜித் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் கடந்த சில நாட்களாக இதனை கொண்டாடி வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அஜித் தான் திரையுலகில் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து தனது ரசிகர்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தியில் ’எனது ரசிகர்கள், என்னை வெறுப்பவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஆகிய மூவரையும் ஒரே நாணயத்தின் 3 பக்கங்களாக நான் பார்க்கிறேன். ரசிகர்களின் அன்பையும், வெறுப்பாளர்களிடமிருந்து வெறுப்பையும், நடுநிலையாளர்களின் பார்வைகளையும் நான் மனதார ஏற்றுக் கொள்கிறேன். வாழு மற்றும் வாழ விடு! எப்பொழுதும் என் அன்பு அனைவருக்கும் உண்டு’ என்று அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளார். அஜித் தரப்பில் இருந்து வெளியிடப்பட்ட இந்த செய்தி தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ’வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து அஜீத் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.