சரியான நேரத்தில் தல ரசிகர்களின் சரியான சமுதாய பணி

  • IndiaGlitz, [Sunday,February 19 2017]

நடிகர்களின் ரசிகர்கள் என்றால் படம் வெளியாகும் தினத்தில் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்பவர்கள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான சமுதாய பணிகளிலும் ஈடுபடுபவர்கள் என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போதைய தலையாய கடமையான சீமைக்கருவேல மரங்களை வெட்டி வீழ்த்துவதில் நடிகர்களின் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் மதுரையை சேர்ந்த தல அஜித் ரசிகர்கள் அப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஈடுபட்டுள்ளனர். நேற்று மதுரையில் வேலம்மாள் கல்லூரி அருகில் உள்ள பனையூர் என்ற பகுதியில் இந்த பணியில் ஈடுபட்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.

நீர் ஆதாரத்திற்கு பெரும் சவாலாக விளங்கக்கூடிய, மண்ணை மலடாக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் சரியான நேரத்தில் சரியான சமுதாய பணியில் ஈடுபட்டுள்ள தல அஜித் ரசிகர்களை போல மற்ற நடிகர்களின் ரசிகர்களும் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நாட்டை யாராவது ஆட்சி செய்துவிட்டு போகட்டும். இப்போதைக்கு நமது முழு கவனமும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு இளைஞர்களும் உணர வேண்டும்

More News

திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற மாறுவேடத்தில் காவல்துறை அதிகாரி. புகைப்பட ஆதாரம்

தமிழக சட்டமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற பெயரில் நடந்த ஜனநாயக கேலிக்கூத்தை அனைவரும் அறிவோம்.

ஜல்லிக்கட்டு மாணவர்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் செய்த உலக சாதனை

கடந்த மாதம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் உலகின் கவனத்தை மெரீனா நோக்கி திரும்ப வைத்தது

நெடுவாசல் காப்போம். ஜி.வி.பிரகாஷின் விழிப்புணர்வு முயற்சி

தமிழகத்தை நோக்கி பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. காவிரி நீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளை நமது அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் யார் யார்?

சபாநாயகரின் உத்தரவை அடுத்து 88 திமுக எம்.எல்.ஏக்களையும் வெளியேற்றும் முயற்சியில் சபைக்காவலர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும். நடிகர் சித்தார்த்

தமிழக சட்டசபையில் ஏகப்பட்ட அமளிகளுக்கு பின்னர் ஒருவழியாக நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்துள்ளது. முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிர்ப்பாக 11 வாக்குகளும் பதிவாகியுள்ளது.