'வலிமை' படப்பிடிப்பு குறித்து அஜித் எடுத்த அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ’வலிமை’. இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த ஆண்டு தீபாவளி அன்று அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது
ஆனால் அஜித் தரப்பில் இருந்து வெளி வந்த செய்தியின்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் முடிந்த பின்னரே தொடங்கும் என்றும், படக்குழுவினர்கள் குறிப்பாக தொழிலாளர்களின் பாதுகாப்பு முக்கியம் என்று அஜித் கருதுவதாகவும் ஒரு செய்தி வெளியானது
இதனால் ‘வலிமை’ திரைப்படம் வெளியாவதில் மேலும் தாமதமாகலாம் என கூறப்படுகிறது. அனேகமாக ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு நவம்பரில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் தான் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
ரஜினியின் ’அண்ணாத்த’ திரைப்படமும் நவம்பருக்கும் மேல் தான் படப்பிடிப்பு தொடங்கும் என்பதால் ’பேட்ட’, விஸ்வாசம்’ படங்கள் போல் ‘அண்ணாத்த’, ‘வலிமை’ ஆகிய இரு படங்களும் கோடை விடுமுறையில் ஒரே நாளில் வெளியானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments