95% திரையரங்குகளில் 'விவேகம்' ரிலீஸ்! புதிய சாதனை ஏற்படுத்துமா?

  • IndiaGlitz, [Saturday,August 19 2017]

தல அஜித், காஜல் அகர்வா, அக்சராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் நடிப்பில் சிவா இயக்கிய 'விவேகம்' திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளது. சென்னை உள்பட பலநகரங்களில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக டிக்கெட்டுக்கள் புக் ஆகி வருகிறது
இந்த நிலையில் தமிழகத்தில் 'விவேகம்' ரிலீஸ் புதிய சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 1090 திரையரங்குகள் இயங்கி வரும் நிலையில் அவற்றில் சுமார் 900 திரையரங்குகளுக்கும் அதிகமாக 'விவேகம்' திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி உண்மை என்றால் 'விவேகம்' படத்தின் ஓப்பனிங் வசூல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையிலும், தமிழகத்திலும் அதிக வசூல் என்ற சாதனையை வைத்துள்ள 'பாகுபலி 2' படத்தின் சாதனையை 'விவேகம்' முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' ஆடியோ விழாவில் ரஜினி?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்த முதல் நேரடி தமிழ் திரைப்படமான 'ஸ்பைடர்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இந்த வருட இறுதியில் வெளியாக தயாராகி வருகிறது

ரஜினியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திடீர் சந்திப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரசிகர்களை சந்தித்த போது விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதை மறைமுகமாக தெரிவித்தார்.

களத்தூர் கிராமத்தின் ஹீரோவாக மாறிய இசைஞானி

இசைஞானி இளையராஜாவின் இசை பல திரைப்படங்களுக்கு ஹீரோவாக இருந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

சிவகார்த்திகேயன் தந்தையாக நடிக்கும் பிரபல காமெடி நடிகர்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

சென்னையில் சன்னிலியோன்: கொச்சி போல் குலுங்குமா?

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நேற்று கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வருகை தந்த போது அவரை பார்க்க அலைகடலென கொச்சியில் ரசிகர்கள் குவிந்தனர்