தல அஜித்தின் 'விவேகம்' ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Friday,July 07 2017]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் ஹாலிவுட் படத்திற்கு இணையாக பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படம் குறித்து சில அரிய தகவல்களை இயக்குனர் சிவா பேட்டி ஒன்றில் தெரிவித்தார் என்பதை நேற்று பார்த்தோம். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த படம் 140 நிமிடங்கள் அதாவது 2 மணி 20 நிமிடங்கள் ஓடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இன்னும் இந்த படம் சென்சாருக்கு செல்லவில்லை என்றாலும் இந்த படத்தின் ரன்னிங் டைமை படக்குழுவினர் முடிவு செய்துவிட்டதாகவும், சென்சாரில் கட் ஏதும் இல்லாமல் இருந்தால் இதுவே இந்த படத்தின் இறுதி ரன்னிங் டைமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அஜித்துக்கு 'ஏகே', கருணாகரனுக்கு 'ஆப்ஸ்': விவேகம் அப்டேட்ஸ்

தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையில் விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித், கருணாகரன் ஆகியோர்களின் கேரக்டர் பெயர் மற்றும் இருவருக்குமான காட்சிகள் குறித்து இயக்குனர் சிறுத்தை சிவா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஒரு திரைப்படம் பார்க்க எவ்வளவு செலவு ஆகும்?

ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி என இரட்டை வரிவிதிப்பை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.

நாளை முதல் திரையரங்குகளின் புதிய டிக்கெட் கட்டணம்

'ஒரே நாடு ஒரே வரி' என்பதெல்லாம் வெறும் வெற்று முழக்கம் தான் என்பதும் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் வரியையும் சேர்த்து கட்ட வேண்டும் என்பதுதான் தலைவிதியாக உள்ளது என்பதும் தான் இன்றைய நிலையாக உள்ளது

தல அஜித்தின் விவேகம்' குறித்த முக்கிய புதிய தகவல்கள்

இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் ஒன்றாக தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இயக்குனர் சிவா எடிட்டிங் உள்பட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகளில் பிசியாக உள்ளார்

விவசாயிகளுக்காக 'ஜோக்கர்' இயக்குனருடன் களமிறங்கும் ஜி.வி.பிரகாஷ்

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஒவ்வொரு சமூக பிரச்சனையின்போது அதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஒரு பாடல் கம்போஸ் செய்து அந்த பாடலை தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது வழக்கம்.