'தல 57' படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் நாள்

  • IndiaGlitz, [Tuesday,September 20 2016]

தல அஜித் நடித்து வரும் 57வது படமான 'தல 57' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமாக முடிந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பதை ஏற்கனவே அறிவித்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் வெள்ளி முதல் ஐதராபாத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படப்பிடிப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.